சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலும் சாதனை படைத்த கல்முனை மாணவி பாத்திமா ஷைரீன்

Date:

சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலும் சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயரியல் விஞ்சான (bio science) பிரிவில் கல்வி பயிலும் மாணவி இமாம் மௌலானா பாத்திமா ஷைரீன் அவர்கள் ஏ.ஆர் மன்சூர் பவுண்டேஷன் அமைப்பினரால் கௌரவிக்கப்படார் .

ஏ.ஆர் மன்சூர் பவுண்டேசனின் தலைவியும் சட்டத்தரணியுமான மர்யம் நளீமுடீன் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மாணவியை கௌரவிக்கும் முகமாக முன்னாள் வர்தக வாணிபதுறை அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர் மன்சூர் அவர்களின் புதல்வரும் ,கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்கள் மாணவியின் வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (26)நேரடியாக சென்று ஐம்பது ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நினைவுச் சின்னம் என்பன அன்பளிப்பாக வழங்கி வைத்தார் .

இம் மாணவி இந்தோனேஷியாவின் ஜாவா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் (2020) இடம்பெற்ற விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் சுமார் 25 நாடுகள் பங்கேற்புடன் சுமார் 400 மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் இம்மாணவி புவியியல் தொடர்பான போட்டியில் பங்குபற்றிய இவர் இதில் முதலாம் இடத்தை பெற்றுசாதனை புரிந்து நமது நாட்டுக்கும் பெருமை ஈட்டித் தந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது .

மேலும் இவர் பாடசாலை பாடசாலை ரீதியாக இடம்பெற்ற தமிழ் தினம் ,ஆங்கில தினம், உள்ளிட்ட அனைத்து போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்றுக்கொண்டார்.

மேலும் இம்மாணவியின் எதிர்கால கல்வி நடவடிக்கை தொடர்பில் கேட்டறிந்த கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது வாழ்த்தினையும் தெரிவித்துக்கொண்டார் .

மேலும் சகல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகிகள் அனைவருக்கும் கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் விஷேட நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

கல்முனை பிராந்தியத்தில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த ஏ.ஆர். மன்சூர் பவுண்டேசன் கல்விக்காக கரம் கொடுக்கும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

வன்னி எஸ்பிரெஸ்
அப்ராஸ்

Popular

More like this
Related

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...