டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு வந்த 200 அழைப்புக்கள்.
டேம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலத்தை அடுத்து அதை அடையாளம் காணும் வகையில் பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடி இருந்தனர். அன்றைய தினம் டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு அந்த சடலத்தை அடையாளம் காணும் நோக்கில் சுமார் 200 தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.
உள்ளுரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இந்த அழைப்புக்கள் தனக்கு வந்ததாக டேம் வீதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்த 200 அழைப்புக்களும் தமது அன்புக்குரிய பெண்களைத் தேடி வரும் நபர்களிடம் இருந்தே வந்துள்ளன. மகள், சகோதரி, மனைவி என காணாமல் போன உறவினர்களைத் தேடிக் கொண்டிருக்கும் நபர்களே சடலத்தை அடையாளம் காணும் நோக்கில் தொடர்பு கொண்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் இவர்கள் பற்றிய விசாரணைகள் தேங்கி உள்ளமையும் தற்போது தெரியவந்துள்ளது.