நுவரெலியா − இராகலை பகுதியிலுள்ள 16 வீடுகளை கொண்ட லயின் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.
இந்த தீ இன்று அதிகாலை 3.30 அளவில் பரவியதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தீ விபத்தினால் 14 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் பாதிக்கப்படுள்ளனர்.
தீயணைப்பு பிரிவு, பொலிஸார், பிரதேச மக்கள் இணைந்து, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.