சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு பாரம்பரிய உற்பத்திபொருட்களின் விற்பனை கண்காட்சிநிகழ்வு வவுனியா மாவடசெயலக வளாகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது பெண்களினால் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு விதமான பாரம்பரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரசஅதிபர் சமன்பந்துலசேன கண்காட்சி நிகழ்வை நாடாவெட்டி ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது மேலதிகஅரச அதிபர் தி.திரேஸ்குமார், உதவிமாவட்டசெயலாளர் சபர்ஜா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மாலினி கிருஸ்ணானந்தன்,மற்றும் மாவட்ட செயலக உயர்அதிகாரிகள் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டிருந்தனர்.



வுவுனியா துவாரகன்