புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்! | டெல்லி விவசாயிகள் எச்சரிக்கை

Date:

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் முற்றுகையிட தயாராக இருப்பதாக டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். நேற்று மத்திய பிரதேச மாநிலம், சிவப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிய டெல்லி போராட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் தியாகத், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். டெல்லியின் எல்லை பகுதிகளான சிங்கூ, திக்ரி மற்றும் காசிப்பூரில் லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 104வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இந்த நிலையில் தங்களது போராட்டத்தை மேலும் வலுப்படுத்த போவதாக ராகேஷ் தியாகத் கூறியிருக்கிறார். தேவைப்பட்டால் லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்களில் சென்று நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட தயாராக இருப்பதாக தியாகத் எச்சரித்துள்ளார்.

கடந்த ஜனவரி 26ம் தேதி டெல்லி நகருக்குள் புகுந்தவை வெறும் 3500 டிராக்டர்கள் தான் என்று தியாகத் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தேவைப்பட்டால், பல லட்சம் டிராக்டர்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர்களாக இருப்பவர்கள் அதிகாரமற்றவர்களாக இருக்கின்றனர் என்றும் அவர் சாடியுள்ளார்.

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...