மட்டக்களப்பு மாவட்டத்தில் 22928 பேர் பரீட்சைக்குத் தோற்றினர் | கொரோனா அச்சத்தலுக்கு மத்தியிலும் கிழக்கில் அமைதியான முறையிலக.பொ.த. சா தரப் பரீட்சைகள் ஆரம்பம்

Date:

கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் கல்விப பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இன்று பரீட்சைகள் கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் ஆரம்பமாகின.

மட்டக்களப்பு மவட்டத்தில் இம்முறை 22928 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.இதற்கென 159பரீட்சை நிலையங்களும் 14 இணைப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பரீட்சை இணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 12671 பேரும் பாடசாலை பரீட்சார்த்திகள் 10257பேரும் பரீட்சைக்குத் தோற்றினர்.11900பெண் மாணவிகளும் 11028 ஆண் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மவட்டத்தில் சகல பரீட்சை நிலையங்களிலும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை தந்திருந்தனர்.கைகளை கழுவி சமுக இடைவெளிகள் பேணப்பட்டு பரீட்சை மண்டபத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
பரீட்சை நிலையங்களில் அதிகமான பொலிசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டதுடன் பொதுச் சுகாதார அதிகாரிகளும் பொலிசாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு நிருபர்

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...