மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மன்னாரில் உள்ள இளைஞர்களால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(7) காலை இரத்ததான முகாம் சிறப்பாக இடம் பெற்றது.
பசியில்லா மன்னார் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர் சதீஸ் தலைமையில் மாவட்ட வைத்தியசாலையின் முழுமையான பங்களிப்புடன் குறித்த இரத்ததான முகாம் மன்னார் பொது வைத்தியசாலையின் இரத்த சேகரிக்கும் பகுதியில் இடம் பெற்றது.
குறித்த இரத்ததான முகாமில் அதிகளவான இளைஞர்கள் , இளைஞர் கழக அங்கத்தவர்கள் பசி இல்லா மன்னார் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
குறித்த அமைப்பினால் தொடர்சியாக பிரதேச ரீதியில் இரத்த தான நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.


மன்னார் நிருபர்