மன்னாரில் வீதி போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரினால் விசேட வாகன பரிசோதனை நடவடிக்கை

Date:

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவும் போக்குவரத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட கண்கானிப்பு நடவடிக்கையானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(26) காலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீர சிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன பிரசாத் ஜயதிலகவின் ஆலோசனைக்கு அமைவாக  மோட்டார் வாகன போக்குவரத்து பொறுப்பதிகாரி மாறசிங்க தலைமையில்     இடம் பெற்றது.
மன்னார் பிரதான பாலப்பகுதியூடாக பயணிக்கும் வகனங்கள் மேற்படி கண்கானிப்பு நடவடிக்கையின் போது முழுமையாக பரிசோதிக்கப்பட்டதுடன் வாகனங்களில் காணப்படும் குறைபாடுகளும் பொலிஸரினால் அடையாளப்படுத்தப்பட்டது.
அதே நேரத்தில் வாகனங்களில் தேவைக்கு அதிகமாக பொருத்தப்பட்ட அலங்காரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை அகற்றுமாறும் வாகன உரிமையாளர்களுக்கு பணிக்கப்படதுடன் பொலிஸார் மற்றும் மோட்டர் வாகன பரீட்சத்தகரினால் அடையாளப்படுத்தப்பட்ட குறைபாடுகளை 10 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து ஆவணங்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் பணிக்கப்பட்டது.
மேற்படி போக்குவரத்து கண்கானிப்பு நடவடிக்கைகளின் போது அடையாளப்பட்டுத்தப்பட்ட குறைபாடுகளை குறித்த காலப்பகுதியினுல் வாகன உரிமையாளர் நிவர்த்தி செய்யாத பட்சத்தில் குறித்த நபர் மீது மன்னார் நீதிமன்றத்தில்  வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார்  நிருபர்

Popular

More like this
Related

AI தொழிநுட்பத்தால் சிறுவர்களுக்கு ஆபத்து: இலங்கை பொலிஸார் தீவிர எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...