மியன்மாரில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 38 பேர் உயிர் இழந்துள்ளனர். மியன்மார் இராணுவ சதிப்புரட்சி ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் மீது இராணுவமும் பொலிஸாரும் நடத்திய தாக்குதலிலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.
மியன்மார் முழுவதும் இராணுவப் புரட்சிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்கள் மீது பொலிஸாரும் இராணுவத்தினரும் பகிரங்கமாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர். இராணுவப் புரட்சி இடம்பெற்றது முதல் இதுவரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 50க்கும் அதிகமானவர்கள் உயிர் இழந்துள்ளனர்.