முகாமையாளரை மாற்றககோரி மட்டக்களப்பு .இ.போ.ச.(டிப்போ) ஊழியர்கள் ஆர்பாட்டம்

Date:

சாலை முகாமையாளரை இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்துச் சாலையின் மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற போதிலும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்கருதி பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெற அனுமதித்துள்ளதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை டிப்போவின் பிரதான நுழைவாயிலை மூடிய ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சாலை முகாமையாளர் எஸ்.கிருஸ்ணராஜிடம் கேட்டபோது—சாலையில் மொத்தம் 198 ஊழியர்கள் கடமை புரிகின்றனர்.அவர்களுள் சொற்றமானவர்களே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்பட்ட ஊழியர்கள் எனத் தெரிவித்தார்.
ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிசார் ஆர்பாட்டக்காரார்களுடன் பேச்சு நடாத்தினர்.
ரீ.எல்.ஜவ்பர்கான் |
புதிய காத்தான்குடி நிருபர்

Popular

More like this
Related

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...

பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’ஐ பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு...