இலங்கை தமிழ் ஊடக வரலாற்றில் வாழும் சினிமா விக்கிபிடியா என கருதப்படும் மூத்த ஊடகவியலாளரான சண் சண்முகராஜா இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
தினபதி , சிந்தாமணி , வீரகேசரி ஆகிய தேசிய பத்திரிகைகளில் கடமைபரிந்த மூத்த ஊடக ஜாம்பவனின் இழப்பு ஊடக துறைக்கு பேரிழப்பாகும்
85 வயதை அன்மையில் பூர்த்தி செய்த அவர் இளம் ஊடகவியலாளர்களுடன் நட்பாக பழகுபவர்.
இவர் கலை இலக்கிய மற்றும் சினிமா விடயங்களில் ஆர்வம் மிக்கவர்.
இவரது மறைவுக்கு NEWSNOW எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.