ஜப்பான் கடல் பகுதியில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன
புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோய் பைடன் பதவிக்கு வந்தபின் வடகொரியா நடத்தியுள்ள பிரதான ஏவுகணை சோதனையாக இது கருதப்படுகின்றது இத்தகைய சோதனைகளை நடத்துவது
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளது இருப்பினும் அந்த தடையை மீறி வடகொரியா இவ்வாறான சோதனைகளை நடத்தி வருகின்றது ஜப்பானும் தென் கொரியாவும் உடனடியாக இந்த சோதனையை கண்டித்துள்ளன ஒரு சில தினங்களுக்கு முன்னர் வடகொரியா சாதாரண
ஏவுகணைகள் இரண்டை மஞ்சள் கடல் பகுதியில் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது ஆனால் இன்றைய சோதனை ஜப்பானிய கடல் பரப்பை நோக்கி நடத்தப்பட்டுள்ளது இருப்பினும் இதன் ஒரு தூசு கூட தன்னுடைய
ஆளுகை பரப்புக்கு உட்பட்ட எல்லைக்குள் விழவில்லை என்று ஜப்பான் அறிவித்துள்ளது. இதே நேரம் வடகொரியா அதன் அண்டை நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும்
எந்த வகையில் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதையே இந்த சோதனைகள் நிரூபித்து உள்ளதாக அமெரிக்க பசுபிக் ராணுவ கட்டளையகம் அறிவித்துள்ளது .