வரையறையற்ற இணையத்தள வசதிகளை (Unlimited Data Packages) வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
இதன்படி, வரையறையற்ற இணையத்தள வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, அனைத்து தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வரையறையற்ற இணையத்தள வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.