வவுனியா வடக்கு நெடுங்கேணி காஞ்சூரமோட்டை கிராம மக்களின்
பிரச்சினையை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று
பார்வையிட்டுள்டளார்.
நெடுங்கேணி மருதோடை கிராம சேவகர் பிரிவில் காஞ்சூரமோட்டை
நாவலர் பண்னை கிராமம் கடந்த அரசாங்க காலத்தில் மீள்குடியேற்றம்
செய்யப்பட்ட நிலையில் கிராமத்துக்கான அடிப்படை வசதிகள் எதுகும் செய்து
கொடுக்கப்படாமல் இருந்த நிலையில் பொது மக்களின் வேண்டுகோளிற்கு
இணங்க வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட
அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான கு.திலீபன் நேரில் சென்று பொது
மக்களின் நிலைமைகளை பார்வையிட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு
சென்ற நிலையில் ஜனாதிபதியினால் வனவள திணைக்களத்திற்கு தகவல் வழங்கி
அந்த கிராமத்துக்குரிய மின் இணைப்புக்கு தடங்களாய் இருந்த மரங்களை
அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மரங்கள் அகற்றப்பட்டு மின்னினைப்புக்குரிய ஆரம்ப கட்ட
வேலைகள் இடம்பெற்று வருவதை பாராளுமன்ற உறுப்பினர் நேரில்
சென்று பொதுமக்களையும் அந்த இடத்தினையும் பார்வையிட்டு கருத்து
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு