விஷேட அதிரடிபடையினரின் சுற்றிவளைப்பில் இருவர் கைது

Date:

வவுனியாவில் விஷேட அதிரடிபடையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இன்று (01) அதிகாலை 12.30 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மடுக்கந்தை விஷேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்களால் மேற்கொள்ளபபட்ட விஷேட நடவடிக்கையில் கஞ்சாப் பொதிகளுடன் இருவர் வெவ்வேறு பகுதிளில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் கைது செய்யபட்ட 16 வயது மதிக்கதக்க இளைஞனிடமிருந்து 3 கிலோ 85 கிராம் கஞ்சாவினையும் கைது செய்யப்பட்ட 61 வயது மதிக்கத்தக்க முதியவரிடம் இருந்து1 கிலோ 890 கிராம் கஞ்சாவினையும் வவுனியா மடுக்கந்தை விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நிருபர்
துவாரகன்

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...