அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக அஷ்ஷெய்க் அர்ஹம் நூராமீத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழுக் கூட்டத்தின் போதே இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக நீண்ட காலம் செயற்பட்ட அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். முபாரக், கடந்த வருடம் ஓக்டோபர் மாதம் காலமானார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அஷ்ஷெய்க் அர்ஹம் நூராமீத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உப செயலாளராகவும், இளைஞர் விவகார பிரிவின் செயலாளராகவும் இவர் நீண்ட காலம் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.