2020 A/L பரீட்சை முடிவுகள் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் | கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா

Date:

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெளியிட முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன பிற்போடப்படுவதற்கு இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், பாடத்திட்டங்கள் முடிக்கப்படாமலிருந்தால் அது தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னர், பரீட்சைகளை குறித்த தினத்தில் நடத்துவதா அல்லது; பிற்போடுவதா என்ற இறுதித் தீர்மானத்துக்கு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் முடிவடைந்த க.பொ.த. சாதாரணத் தர பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...