332 பிரதேச செயலகங்களில் உள்ள கிராமங்களில் கிராமிய விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நேற்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களது எண்ணக்கருவிற்கமைய விளையாட்டுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, நாட்டில் புதிய விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ‘கிராமத்திற்கு மைதானம்’ தேசிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரதேச செயலகத்தில் அப் பிரதேச மக்கள் அனைத்து விளையாட்டுகளிலும் ஈடுபடும் வகையில் ஒவ்வொரு மைதானத்தை உருவாக்கி கொடுப்பது இலக்காகும்.விளையாட்டு பாடசாலைகளை 30வரை அதிகரிப்பதற்கான வேலைப்பாடுகளையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.