9 தாய்மார் உரிமைகோரிய சுனாமி பேபி 81 | க.பொ.த. சா.தரப் பரீட்சைக்குத் தோற்றினார்

Date:

2004.டிசம்பர் 26 சுனாமி தாக்கத்தின்போது காணாமல் போய் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் 9 தாய்மார்கள் உரிமை கோரிய சுனாமி பேபி 81 என்ற கல்முனையைச் சேர்ந்த ஜெயரராஸ் அபிலாஸ் இன்று கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினார்.

தனது களுதாவளை இல்லத்தில் நிர்மாணத்துள்ள சுனாமி நினைவுத்தூபியில் இன்று தனது பெற்றோருடன் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்திய பின்னர் செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்திலு அமைந்துள்ள பரீட்சை மண்டபத்திற்குச் சென்றார்.

கொவிட் 19 சுகாதார நடைமுறைமுறைகளைப் பேணி முகக்கவசம் அணந்து அபிலாஸ் பரீட்சைக்குத் தோற்றினார்.

67 நாட்களே ஆன அபிலாஸ் கடலலைகளினால் அள்ளுண்டு செல்லப்பட்டு 18 மணித்தியாலங்களின் பின்னர் பாறையொன்னிறினுள் புகுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தாதியர்களின் பராமரிப்பில் வைக்கப்படடிருந்த அபிலாஸை 9 தாய்மார்கள் தனது பிள்ளையென உரிமை கோரியபோது நீதிமன்றம் சென்று டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் தந்தையான ஜெயராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

உலகப்புகழ் பெற்ற அபிலாஸ் இன்று ஆரம்பமாகும் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும்
அதே நேரம் ஒரு வைத்தியராகவேண்டும் என்ற கனவில் அபிலாஸ் வாழ்கிறார்.

தான் அனுதிக்கபட்டிருந்த வைத்தியசாலையின் கட்டிலின் இலக்கமே 81 ஆகும் அதனாலேயே அபிலாஸ் இன்றும் சுனாமி பேபி 81 என அழைக்கப்படுகிறார்.

மட்டக்களப்பு நிருபர்
ரீ.எல்.ஜவ்பர்கான்

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...