கிளிநொச்சி இரணைதீவில் ஜனாசா புதைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்
இரணைதீவு மக்களும் கிராம மட்ட மைப்புக்கள் மற்றும் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் பங்கு தந்தையர்களும், சிவில் அமைப்புக்களும் கலந்து கொண்டனர்.
கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவு பகுதியை தெரிவு செய்துள்ளதாக நேற்றைய தினம் அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
குறித்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும், அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதிக்கு அறிவித்தல் ஏதுமின்றி இரகசியமாக சென்ற குழு அதற்கான சிபாரிசினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று குறித்த பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு பூர்வீக குடிகளாக இருந்த மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மாற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வே்ணடும் என இரணைதீவு மக்களும், கோரிகை முன்வைத்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.