அடுத்த கட்ட கொவிட் தடுப்பு மருந்தை பெறுவதில் சிக்கல்

Date:

இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தபடி கொவிட் தடுப்பு மருந்தின் அடுத்த கட்ட பகுதியை இம் மாத நடுப்பகுதியில் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்று இன்று பிரதான தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின் பிரகாரம் கொவிட் தடுப்பு மருந்தின் உற்பத்தியாளர்களான இந்தியாவின் செரம் நிறுவனம் இந்த தடுப்பு மருந்தின் அடுத்த கட்டத்தை ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் மாத நடுப்பகுதியில் அனுப்பி வைக்க முடியாது என இலங்கை மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கு
அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்த கடிதம் மார்ச் மாதம் மூன்றாம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இலங்கை அரசாங்கம் 15லட்சம் சொட்டு
தடுப்பு மருந்தினை பெற்றுக்கொள்வதற்கான கொடுப்பனவை ஏற்கனவே செலுத்தியுள்ளது .

இதில் 5 லட்சம் சொட்டு கடந்த பெப்ரவரி மாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியில் ஒரு தொகுதி இம்மாத நடுப்பகுதியில் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதைக்கு அதை அனுப்பி வைக்க முடியாது என செரம் நிறுவனம்
அறிவித்துள்ளது .தமது தடுப்பு மருந்து
உற்பத்தி பிரிவில் எதிர்பாராத சில தடைகள் ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என்று செரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கை தடுப்பூசி வழங்கும் திட்டம் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ள தாக
தெரியவருகின்றது .இந்த தடுப்பு மருந்தினை பெற்றுக்கொள்வதற்காக ஒரு சொட்டுக்கு 5 தசம் 25 அமெரிக்க டொலர்களை
இலங்கை அரசாங்கம் செலுத்தி உள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது .

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...