இலங்கை தேசிய கொடி அவமதிப்பு | உலகின் முன்னணி நிறுவனம்! Amazonக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்

Date:

இணைத்தின் ஊடாக பொருட்ளை விற்பனை செய்யும் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று இலங்கை தேசிய கொடியின் உருவத்துடனான கால் துடைப்பான் மற்றும் பாதணிகளை அதன் இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டுள்ளது.

Amazon இணையதளத்திலேயே குறித்த பொருட்கள் விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை இலங்கையர்களும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

12 அமெரிக்க டொலருக்கு குறித்த கால் துடைப்பானை விற்பனைக்கு பதிவிட்டுள்ளதுடன் அதற்கான விநியோக கட்டணமாக 9 டொலர்கள் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதணிகள் 20 டொலருக்கு விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ளதுடன் அதற்கான விநியோக கட்டணமாக 10 டொலர்கள் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் எமது செய்திப்பிரிவு வினவிய போது,

இந்த விடயம் மிகவும் கவலையளிப்பதாகவும், இது தொடர்பில் இன்று காலை முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வௌிநாட்டு அமைச்சு மற்றும் தூதரகங்கள் ஊடாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...