கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு

Date:

கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு

கிண்ணியா பிரதேச செயலகத்தில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களின் சுகாதாரத்தை கருத்திற்க் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் இன்று (04) காலை நடைபெற்றது

மருத்துவ முகாம் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி அவர்களின் ஏற்பாட்டில் கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

கிண்ணியா பிரதேச செயலகத்தில் கடமையாட்டுகின்ற ஆண், பெண் உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் ஆயுர்வேத மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உடற்ப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆயுர்வேத மருந்து வகைகளை பெற்றுக் கொண்டனர்

இந்த மருத்துவ முகாமில் சக்கரை நோய் , குருதி அழுத்தம் மற்றும் கொலோஸ்ரோல் பரிசோதனைகள் இலவசமாக செய்ப்பட்டது

நடுத்தீவு மாவட்ட ஆயுர்வேத வைத்திய சாலை பொறுப்பதிகாரி வைத்தியர் Dr.மாஸாத், ஆயுர்வேத சமூக வைத்தியர் Dr. நஸ்மி , மற்றும் வைத்தியர் Dr. பெளமிதா, ஆகியோர் கலந்துகொண்டு வைத்திய ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்கி வைத்தனர்.

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியா நிருபர்

Popular

More like this
Related

இலங்கை -துருக்கி இடையிலான விவசாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர...

அரச சேவையை இலகுபடுத்தும் Government SuperApp!

அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’...

சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவருமான ஷேக் அப்துல் அஸீஸ் ஆல்-ஷேக் காலமானார்.

சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவருமான ஷேக்...

பாலஸ்தீன் நாட்டை அங்கீகரித்தல்: ஒரு இராஜதந்திர பார்வை!

உலக நாடுகளின் திடீர் பலஸ்தீன ஆதரவுக் குரலின் தீவிரம் குறித்தும், அதன்...