சட்டத்துறை இறுதியாண்டு மாணவன் மீதான தாக்குதல் | பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்

Date:

சட்டத்துறையில் கல்விபயிலும் இறுதி ஆண்டு மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்தவகையில் சம்பவத்துடன் தொடர்புடைய பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளை தண்டனை மற்றும் சித்திரவதை சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பேலியகொடை பொலிஸ் அதிகாரிகள் கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அன்று மிகார குணரத்ன என்ற சட்டத்துறை மாணன் மீது தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு தாக்கப்பட்ட மாணவன் மத்திய மாகாண முன்னாள் ஆளுநர், ஜனாதிபதி ஆலோசகர் மைத்ரி குணரத்னவின் மகன் மற்றும் சட்டத்தரணி சரித குணரத்னாவின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபரைப் பார்க்க பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது கிட்டத்தட்ட 10 பொலிஸ் அதிகாரிகள் அவரைத் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...