தந்தையை நோக்கி ஓடி வந்த 7 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற மியன்மார் பொலிஸ்

Date:

மியன்மாரில் ஏழு வயதே ஆன சிறுமியை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.
மியன்மாரில் கடந்த மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியை அடுத்து கொல்லப்பட்ட மிகவும் இளவயது சிறுமி இவராவார்.

கின் மியோ சிட்டி என்ற சிறுமியே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கையில்,
மண்டேலா நகரில் உள்ள தமது வீட்டில் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டவேளை சிறுமி தந்தையை நோக்கி ஓடி வருகையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட டசின் கணக்கான மக்களில் 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடங்குவதாக ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
மியன்மாரில் நடந்துவரும் போராட்டங்களில் இதுவரை 164 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 261 இற்கும் அதிகம் என அரசியல் கைதிகளுக்கான உதவிக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...