தலைமன்னாரில் புகையிரத விபத்திற்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு | பாடசாலை மாணவர்கள் கிராம மக்கள் பங்கேற்பு

Date:

தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள   புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  மதியம்    தனியார் பேரூந்தும்  புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று    திங்கட்கிழமை காலை குறித்த பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சர்வமத தலைவர்கள் அரசியல் பிரதி நிதிகள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள   புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  மதியம்    தனியார் பேரூந்தும்  புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் தலை மன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வந்த பாலச்சந்திரன் தருண் (வயது-14) என்ற மாணவன் உயிரிழந்த தோடு, மாணவர்கள் பொது மக்கள் என 25 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த விபத்திற்கு நீதி கோரி குறித்த போராட்டம் இடம் பெற்றது.
இன்று காலை 7.45 மணியளவில் தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பமானது.
இதன் போது பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,சர்வமத தலைவர்கள் அரசியல் பிரதி நிதிகள் ஆகியோர் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள   புகையிரத கடவை வரை பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இதன் போது போராட்டம் இடம் பெற்ற பகுதிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், மன்னார் பிரதேச செயலாளர் , புகையிரத திணைக்கள அதிகாரி ஆகியோர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினர்.
இதன் போது பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.
குறிப்பாக குறித்த புகையிரத கடவைக்கான   தடையினை புதிதாக அமைத்து, அதற்கான பாதுகாப்பு ஊழியரை புதிதாக நியமிக்க கோரியும் குறிப்பாக வயோதிபர் இல்லாமல் நடுத்தர வயதுடையவர்களை கடமையில் ஈடுபடுத்தி, குறித்த புகையிரத கடவையில் பொலிஸாரின் கண்காணிப்பு இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர்.
இதன் போது குறித்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசாங்க அதிபர் உறுதியளித்தார்.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்

நாட்டில் இன்று (27) பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என...

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...