பசறையில் மீண்டுமொரு கோர விபத்து! | ஸ்தலத்திலே பெண்ணொருவர் பலி |

Date:

பதுளை − பசறை பகுதியில் 14 பேரின் உயிரை காவுக்கொண்ட பஸ் விபத்திலிருந்து நொடி பொழுதில் தப்பிய பிபில பகுதியைச் சேர்ந்த இம்ரான் கான், தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இம்ரான் கான், இந்த பஸ்ஸிலேயே நாளாந்தம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

எனினும், பஸ் விபத்துக்குள்ளான கடந்த 20ம் திகதி, நொடி பொழுதில் அந்த பஸ்ஸில் ஏறுவதற்கு இம்ரான் கானுக்கு முடியாது போயுள்ளது.

இம்ரான் கான் வழமையாக ஏறும் இடத்திற்கு பஸ், சுமார் 7:15 அளவில் வந்துள்ளது.

பஸ்ஸை நிறுத்துமாறு கைகளை காண்பித்து கோரிய போதிலும், பஸ்ஸின் சாரதி, பஸ்ஸை நிறுத்தாது பயணித்துள்ளதாக இம்ரான் கான் தெரிவிக்கின்றார்.

பஸ்ஸின் சாரதி தொலைபேசியில் உரையாடிக்கொண்டு பயணித்ததை தான் அவதானித்ததாகவும் அவர் கூறுகின்றார்.

பஸ் நிறுத்தாது பயணித்து, சில நொடிகளில் தன் கண் முன்பாகவே பள்ளத்தில் குடைசாய்ந்து, விபத்துக்குள்ளாகியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...