பரீட்ச்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்ட நபர் கைது

Date:

அநுராதபுரம் பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பரீட்ச்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்ட வேறு ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் இபலோகம பொலிஸ் அதிகாரிகளினால் இவ்வாறு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கணித பரீட்சையில் உறவினர் ஒருவருக்காக முன்னின்றமை தொடர்பில் பரீட்சை கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திஸ்ஸமஹராம, வீரவல பகுதியை சேர்ந்த குறித்த நபர் பரீட்சை எழுதுவதற்காக அநுராதபுரத்திற்கு வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் வலஸ்முல்ல மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இது போன்று பரீட்சை எழுத முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’ஐ பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு...

வாகன இலக்கத் தகடுகளை பெறாத உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாகன...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையற்ற வானிலை நிலவும்

இன்றையதினம் (26) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...

இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...