புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளமை இனவெறி நிகழ்ச்சி | முஸ்லீம் கவுன்சில் தெரிவிப்பு

Date:

புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளதை இனவெறி நிகழ்ச்சி நிரல் என முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது என அல்ஜசீரா குறிப்பிட்டுள்ளது. இது இனவெறி நிகழ்ச்சி நிரல் என இலங்கையின் முஸ்லீம் கவுன்சிலின் ஹில்மி அகமட் தெரிவித்துள்ளார் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

அவர்கள் தாங்கள் முஸ்லீம்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கின்றோம் என சிங்களவர்களிற்கு வலியுறுத்த விரும்புகின்றனர் என ஹில்மி அகமட் அல்ஜசீரா குறிப்பிட்டுள்ளார்.
புர்காவை பெண்கள் தங்களிற்கு விருப்பமான உடையை அணிவதற்கு உள்ள உரிமையாக இதனை கருதவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்த 350 பேரின் உடல்களை அவர்களின் மத நம்பிக்கைகளை மீறி அவர்கள் தகனம் செய்தனர், தற்போது அவர்கள் புர்காவையும் மத்ரசாக்களையும் தடை செய்ய முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்ராசாக்களின் நோக்கத்தை போன்ற நோக்கத்தை கொண்ட பௌத்த கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிற்கு எதிராக இந்த நடவடிக்கைகளை எடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Popular

More like this
Related

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...

ஒரு சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களில் அவ்வப்போது...

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...