மன்னார் கரிசல் காட்டுப்பகுதியில் உருக்குழைந்த நிலையில் சடலம் மீட்பு

Date:

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை  உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள  காட்டுப் பகுதியில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை(23) மாலை குறித்த சடலத்தை அவதானித்த நிலையில் குறித்த சடலம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை அவதானித்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை.
குறித்த குறித்த நபர் சுமார் 20 நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்க முடியும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளதோடு, குறித்த சடலம் சிதைவடைந்து உருக்குழைந்த நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் காணப்பட்டது.
இன்று புதன் கிழமை (24) காலை சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சடலத்திற்கு அருகில் பாதனியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...