மேல் மாகாணத்தில் நேற்று ஏழாம் திகதி பொலிஸார் மேற்கொண்ட விஷேட அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போது 1158 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபன்து தென்னக்கோனின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விஷேட தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. நேற்றுக் காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணிவரை இந்தத் தேடுதல் இடம்பெற்றது.
நேற்று கைது செய்யப்பட்டவர்களில் 584 பேர் ஏற்கனவே நீதிமன்றங்களால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள். 44 பேர் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்பு பட்டவர்கள், மேலும் 441 பேர் மேசடிக் குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.