யாழில் இருந்து வவுனியா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேரூந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக பொலிஸார் மற்றும சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா ஊடக பயணிக்கும் பேரூந்துகளை வழி மறித்து வவுனியாவில் இறங்கவுள்ள பயணிகளிடமே குறித்த பரிசொதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் கொரனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து வவுனியாவிற்கு வரும் பயணிகளுடாக வவுனியாவிற்கும் தொற்று பரவுவதை தடுப்பதற்கே குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.வவுனியா

Popular

More like this
Related

இஸ்லாம் மலேசியா நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் ஆளுகை குறித்த பயிற்சித் திட்டம்

மலேசிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் லத்திஹான் இஸ்லாம் மலேசியா (ILIM) நிறுவனம்,...

கெஹெல்பத்தர பத்மேவின் சொத்துகள் முடக்கம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு...

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு.

கொழும்பு 01 முதல் 15 வரை பல பகுதிகளுக்கு நாளைய தினம்...