இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மூன்று லட்சம் புதிய கொரோணா தொற்றாளர்கள்

Date:

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று காலை வெளியாகியுள்ள தகவல்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிய கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் புதிய தொ ற்றாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 430 ஆக காணப்பட்டது.

தற்போது இந்தியாவில் அதைவிட புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 59 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலைக்கு இந்தியா வந்துள்ளது. தினசரி மரணங்களின் எண்ணிக்கையும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது .

இந்தியாவில் தற்போது பரவி வருவது இரட்டை உருமாற்ற வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது சூப்பர் பரவல் வேகம் கொண்டது அதாவது அதிகமான பரவல் வேகம் கொண்டது என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் நிலைமை நாளுக்கு நாள் இந்தியாவில் மோசமடைய தொடங்கியுள்ளது. சில வைத்திய சாலைகளில் வைத்தியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .

Popular

More like this
Related

கடந்த 22 மணித்தியாலங்களில் கெஸ்பேவையில் 204 மி.மீ அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

கடந்த 22 மணி நேரத்தில் கெஸ்பேவ பகுதியில் அதிகபட்சமாக 204 மி.மீ...

நாகரிக அரசியல் செய்யும் விஜய்: காதர் மொய்தீன் பாராட்டு!

இந்திய முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் விஜய்...

வரலாறு படைக்கும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற...

இலங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘பௌத்த – முஸ்லிம் உரையாடல்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH-ல்

இலங்கையில் பல சமய, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும்...