இலங்கையில் 6 கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானம்

Date:

கட்சிகளுக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இப்படியான 6 கட்சிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த கட்சிகளின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு சிலர் உரிமை கோரியுள்ளதால், சட்ட ரீதியான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், இதனை தீர்க்க அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

வழக்குகள் முடிவடையும் வரை இந்த கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் காரணமாக குறித்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கட்சிகளின் பெயர்களை வெளியிட முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

QR குறியீடு மூலமான எரிபொருள் ஒதுக்கீட்டு முறை தொடரும்: கனிப்பொருள் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை...

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...