நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம்

Date:

உயிர்த்த ஞாயிறு வாரத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலன்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான தேவாலயங்களில் மற்றும் இனங்காணப்பட்ட சில பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் உயிர்த்த ஞாயிறு வாரம் பூராவும் அமலில் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...