2016 – 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு 01.01.2020 முதல் வழங்கப்படவேண்டிய அதிகரித்த ஓய்வூதியத்தை ஜனாதிபதி கோட்டாபாய அவர்களின் தலைமையிலான அமைச்சரவை எவ்வித காரணமும் இன்றி அநீதியான முறையில் இடைநிறுத்தியது.
இதற்கெதிராக மாபெரும் எதிர்ப்பு பேரணி 2021.04.27 ஆம் திகதி காலை 10.00 மணி க்கு கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவிற்கு முன்னால் நடைபெறவுள்ளது.
நாடாளாவிய ரீதியில் உள்ள பாதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களை அன்றைய இப் பேரணியில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிதாரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் உப – தலைவர் ஏ.எல்.முகம்மட்முக்தார் தெரிவித்தார்.