மகாராஷ்டிராவில் ஒட்சிசன் தாங்கியில் கசிவு | விநியோகம் தடைப்பட்டதால் 22 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

Date:

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாக்டர் ஜாகீர் உசைன் மருத்துவமனையில் இன்று ஒட்சிசன் தாங்கியில் திடீரென கசிவு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வாயுக் கசிவை கட்டுப்படுத்தினர்.

எனினும் இந்த விபத்தைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கான ஒட்சிசன் விநியோகம் சிறிது நேரம் தடைப்பட்டதால், வென்டிலேட்டர் ஆதரவுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து செய்தியைக் கேட்டு மன வேதனை அடைந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அமித் ஷா கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாநில மந்திரி சகன் புஜ்பால் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். விரைவில் அங்கு சென்று பார்வையிட உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...