வவுனியாவில் காவல்துறை எனக்கூறி நகை கொள்ளை!

Date:

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் பொலிசார் என தெரிவித்து 5பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றயதினம் கார் ஒன்றில் சென்ற குறித்தநபர்கள் வவுனியா தம்பனைபுளியங்குளம் மற்றும் பத்தினியார் மகிழங்குளம் பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்று,தங்களை பொலிசார் என அடையாளப்படுத்திக்கொண்டு, வீட்டை சோதனை செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதனைநம்பி வீட்டின் உரிமையாளர்கள்
அவர்களை அனுமதித்த நிலையில்,வீட்டில்சோதனைசெய்வது போல பாசாங்கு செய்துவிட்டு அங்கிருந்த தங்க ஆபரணங்களை களவாடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
வவுனியா நிருபர் 

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...