வவுனியாவில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒருவர் காயம்

Date:

வவுனியா திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் மோட்டார் சைக்களில்  மோதி விபத்து நேர்ந்துள்ளது.
திருநாவல்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் புகையிரதம் வருவதனை அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக இப்பகுதியில் பல விபத்துக்கள் இடம்பெறும் நிலை காணப்பட்ட போதிலும் அப்பகுதியில் உள்ள முற்சக்கரவண்டி சாரதிகளின் ஒத்துழைப்பால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் குறித்த புகையிரதக்கடவையினை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட 40 வயதுடைய நிசாகரன் மீது புகையிரதம் மோதியுள்ளது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
வவுனியா நிருபர் 

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...