இந்தியாவில் கொரோணா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்று புதன் கிழமை காலை வெளியாகி உள்ள தகவல்களின் படி புதிதாக மூன்று லட்சம் தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்துக்குள் இனம் காணப்பட்ட ஆகக் கூடுதலான தொகை இதுவாகும்.
இதன் படி இந்தியாவில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1கோடி 56 லட்சத்து 9ஆயிரத்து நான்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட்-19 காரணமாக இந்தியாவில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்தில் 2020 ஆகவும் அதிகரித்துள்ளது.
மொத்தமாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 570 ஆகும். இந்தியாவில் கொரோணா இரண்டாவது அலை மிக மோசமான கட்டத்துக்கு வந்துள்ளது. புதுடில்லி, மும்பாய் அஹமதாபாத், லக்னோ, போபால், கொல்கத்தா, அலஹாபாத், சூரத் ஆகிய நகரங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நகரங்களில் ஆஸ்பத்திரிகளில் சமாளிக்க முடியாத அளவுக்கு பெரும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.