இன்று காலை வெளியாகி உள்ள சில தகவல்களின் படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லடசத்து 15 ஆயிரத்து 736 அக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொவிட் 19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12.8 மில்லியனாகக் (ஒரு கோடி 28 லட்சம்) காணப்படுகின்றது.
உலகில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 1லட்சத்து 66 ஆயிரத்து 177 கொவிட் மரணங்கள் சம்பவித்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 630 மரணங்கள் சம்பவித்துள்ளன.
இந்தப் புதிய நோய்ப்பரவல் தாக்கத்தை அடுத்து இந்திய தலைநகர் புதுடில்லியில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனைய மாநிலங்களிலும் உள்ளுர் அதிகாரிகள் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான கண்டிப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.