கொவிட் 19 தடுப்பு மருந்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட மருத்துவர் பதவி நீக்கம்

Date:

தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினர் ஒருவரை சுகாதார அமைச்சர் பதவி நீக்கம் செய்துள்ளார்.

பிரபல சிறுவர் மருத்துவ இயல் நிபுணரான டாக்டர் லக்குமார்
பெர்னாந்து என்பவரே இவ்வாறு தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து சுகாதார அமைச்சரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் கொவிட் 19 தடுப்பூசி மருந்துகளுக்கு எதிரான அதிலும் குறிப்பாக சீனாவின் சினோபாம் தடுப்பூசி மருந்துக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டவர். இந்த covid-19 தடுப்பூசிகள் இலங்கையர்களுக்கு வழங்கப்படுவது ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே இருக்கின்றது என்றும், அதனை இப்போதைக்கு செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் இவர் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பல இடங்களில் அவர் தனது கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். இவர் சிறுவர் மருத்துவ சங்கத்தின் பிரதிநிதியாகவே தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினராக இருந்து வருகின்றார். சுகாதார அமைச்சர் இவருடைய இந்த எதிர் நிலைப்பாடு காரணமாக அவரை குறிப்பிட்ட சபையில் இருந்து பதவி நீக்கம் செய்துள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகி உள்ளன .

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...