நாட்டில் தீவிரவாதிகளின் ஆபத்து இன்னமும் உள்ளது | ஓமல்பே சோபித தேரர்

Date:

நாட்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இன்னமும் நிலவு கிறது என்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு தாக்குதலி லிருந்தும் பொதுமக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு கொ ழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்ன நடக்குமோ?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காகத் தற்கொலை குண்டுவீச்சாளர்களு டன் பயிற்சி பெற்ற மற்றும் நடவடிக்கைகளுக்குக் கட்டளையிட்ட நபர் கள் இன்னமும் கைது செய்யப்படாததால், நாடு பெரும் ஆபத்தில் உள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் தங்கள் இலக்குகளை நிறைவேற்ற எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதலை நடத்துவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பௌத்த விகாரைகள், மத வழிபாடுகள், கோவில்கள் மற்றும் தேவாலயங் களில் இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் ஏற்படுமா என்ற சந்தேகம் எங் களுக்குள் எழாமல் இருக்க அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...