பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
குவெட்டா நகரின் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கின்றது .
இந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தானில் உள்ள சீன தூதுவரை இலக்குவைத்து நடத்தப்பட்ட இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் இந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அவர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள குவேட்டா நகரில் இருந்திருக்கின்றார் என்ற தகவலும் இப்போது வெளியாகி இருக்கின்றது. தலிபான் இயக்கத்தினர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உரிமை கோரியுள்ளனர்.