யாழ் மாவட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு

Date:

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமாக உள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் தடை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் திரையரங்குகளை மூடவில்லை என்று எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அது தொடர்பில் ஆராயப்பட்டது.

அதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல்வரை மூடப்படுகின்றன” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதுப்பிக்கப்படும் அஸ்வெசும தகவல்கள்!

அஸ்வெசும வருடாந்த தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. 2023ம்...

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகி,...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும்...