நடிகர் சரத் குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசோலை மோசடி விவகாரம் தொடர்பிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், சிறைத் தண்டனையை இடைநிறுத்தி வைக்குமாறு சரத் குமார் மற்றும் ராதிகா ஆகியோர் மனுவொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணைகள் இன்றைய தினமே எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.