ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற முச்சக்கரவண்டியுடுன் அதற்கு நேரெதிரில் பயணித்த பஸ் உடன் மோதியதில் இன்று மதியம் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்படி, முச்சக்கரவண்டி சாரதி வாகன கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையல், காயமடைந்த இருவரும், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.