1000 ரூபா அடிப்படை சம்பளத்துடன் பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் கிடைக்கும்

Date:

1000 ரூபாவை அடிப்படை சம்பளமாகக்கொண்டு பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் வழங்கப்படும் என்று சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்றைய (09) தினம் தினம் கொட்டகலை உடக வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் நீண்டநாள் கனவாகவும் எமது வேண்டுகோளுக்கு இணங்க அடிப்படை சம்பளமாக 1000 ரூபா கிடைத்துள்ளது .இது சாத்தியமாவதற்கு காரணமான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பெருந்தோட்ட துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் விசேடமாக தொழில் அமைச்சர் நிமால் சிரிப்பாலடி சில்வா அவர்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த ஒரு வருடகாலமாக நிலவும் கொரோன அச்சுறுத்தல் நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்திற்கு முக்கியதுவம் வழங்கி இன்று 1000 ரூபா பெற்றுக்கொடுத்துள்ளோம். இவ் விடையத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு யாழ் பல்கலை கழக மாணவர்கள் இபோக்குவரத்து சேவை சங்கத்தினர் அனைவருக்கும் இவ் சந்தர்ப்பத்திலே நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

இந்த சம்பள அதிகரிப்பில் 900 அடிப்படையாகவும் வரவு செலவு திட்ட கொடுப்பனவாக 100 ரூபாயும் சேர்த்து 1000 ரூபா வாங்கப்படுகிறது. 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாகக்கொண்டு பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் வழங்கப்படும்.

வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கைக்கு அமைவாக 1000 ரூபா வழங்கப்ப வேண்டும் ஒருசில தோட்ட நிர்வாகங்கள் தேயிலை பறிக்கும் அளவை அதிகரித்தமை இது தொடர்பாக எங்களது கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து நேற்றைய முன்தினம் பெருந்தோட்ட யாக்கங்களின் நிறைவேற்று அதிகாரிகளுடன் கலந்துரையாடி சாதகமான தீர்வு எட்டப்பட்டது.

இதேவேளை ஏழு வருடங்களுக்கு முன்னரே தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டுள்ளது இந்த 1000 ரூபா எங்களது இலக்கல்ல இதற்கு மேலாக தோட்ட தொழிலாளர்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதே எங்களது இலக்கு என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில், இ.தொ.காவின் உப தலைவர் கணபதி கனகராஜ், பிரஜா சக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பரத் அருள்சாமி .தொ.காவின் இளைஞர் அணியின் பொதுச்செயலாளர் அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...