பாதாள குழு ஒன்றின் தலைவர் தர்ம சிறி பெரேரா அல்லது தர்மே என அழைக்கப்படும் நபரின் 136 மில்லியன் ரூபா பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்ததாகக் கூறப்படும் 27 வயது நபரை குற்றத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தர்மே எனப்படும் பாதாள உலகத் தலைவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனன்ஜய டி சில்வாவின் தந்தையின் கொலை உட்பட பல குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்படும் ஒருவராவார். இவர் தற்போது துபாயில் தலைமறைவாகி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இரத்மலானையில் வசிக்கும் 27வயது நபர் ஒருவரின் வங்கிக் கணக்கில் தர்மே என்பருக்கு சொந்தமான பணம் வைப்பில் உள்ளமை பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது. இந்தப் பணம் சட்டவிரோதாமான முறையில் உழைத்த பணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.