136 மில்லியன் ரூபா நாணயச் சலவை மோசடியில் ஈடுபட்ட 27வயது நபர் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது

Date:

பாதாள குழு ஒன்றின் தலைவர் தர்ம சிறி பெரேரா அல்லது தர்மே என அழைக்கப்படும் நபரின் 136 மில்லியன் ரூபா பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்ததாகக் கூறப்படும் 27 வயது நபரை குற்றத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தர்மே எனப்படும் பாதாள உலகத் தலைவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனன்ஜய டி சில்வாவின் தந்தையின் கொலை உட்பட பல குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்படும் ஒருவராவார். இவர் தற்போது துபாயில் தலைமறைவாகி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரத்மலானையில் வசிக்கும் 27வயது நபர் ஒருவரின் வங்கிக் கணக்கில் தர்மே என்பருக்கு சொந்தமான பணம் வைப்பில் உள்ளமை பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது. இந்தப் பணம் சட்டவிரோதாமான முறையில் உழைத்த பணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

நாட்டை வந்தடைந்த லாஃப்ஸ் எரிவாயு கப்பல்

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல்...

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல் – தெஹ்ரானில் அதிரும் குண்டுவெடிப்புகள்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ஈரான்...

வரலாற்றுச் சிறப்புமிக்க அங்காரா மஸ்ஜிதில் ஜும்ஆ உரை நிகழ்த்திய இலங்கை மாணவர்!

இலங்கையைச் சேர்ந்த மாணவர் Fathhy Yakan Nagoor Gafoordeen துருக்கியின் தலைநகர்...